சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் மினி பஸ் சேவை தொடக்கம்

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2021, 01:22 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் மினி பஸ் சேவை தொடக்கம் title=

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் (Chennai Metro Rail) திட்டத்திற்கு கடந்த திமுக அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினால்  2009ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

ALSO READ நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை (Multi Modal Integration) உறுதி செய்யும் வகையில், மெட்ரோ இரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள. தனி வண்ணத்தில் 12 இணைப்பு சிற்றுந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள் இயக்கப்படும். 

 

 

முதற்கட்டமாக ஆலந்தூர், விமானநிலையம், திருவொற்றியூர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்து வசதி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

ALSO READ தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News