சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் முனியாண்டி என்ற ஜெயக்குமார் (வயது 39) தன் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், அவர்களது 9 வயது சிறுமியை உறவினர் ஓம்குமார் என்பவர் வளர்த்து வருகிறார்
இந்நிலையில் சிறுமி தனது அத்தை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் சிறுமியின் தந்தையும் அதே வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் அத்தை திருமண நிகழ்வுக்காக வெளியே சென்றிருந்த பொழுது சிறுமி அதே வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை நேரத்தில் தந்தை முனியாண்டி என்ற ஜெயக்குமார் ஒன்பது வயது அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த பொழுது வளர்ப்பு தந்தை ஓம்குமார் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாத்தா மற்றும் ஓம்குமார் ஆகியோர் சிறுமியை அழைத்துக் கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்த பொழுது அங்கு அச்சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி அழுதுள்ளார்.
மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்
இச்சம்பவம் தொடர்பாக ஓம்குமார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முனியாண்டி என்ற ஜெயக்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தந்தையே தனது பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மதுபோதையில் தாயிடம் தகராறு - அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பிகள்!
மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR