வர்தா புயல்: தமிழகத்துக்கு நிவாரணம் கோரி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Last Updated : Dec 14, 2016, 06:28 PM IST
வர்தா புயல்: தமிழகத்துக்கு நிவாரணம் கோரி எம்.பி.க்கள் வலியுறுத்தல் title=

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. வார்தா புயல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது

டெல்லி மேல் சபையில் வார்தா புயல் பாதிப்பு குறித்த விவாதம் நடந்தது. இதில் பேசிய தமிழக எம்.பி.க்கள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுத்தினார்.

வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மின்சாரம், தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய குழுவை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கு நிலவும் சூழ்நிலையை ஆராய வேண்டும். உதவிகளை செய்ய வேண்டும். வர்தா புயலால் பாதிப்புக்கு உள்ளான தமிழகத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழக வங்கிகளுக்கு கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அனுப்ப வேண்டும். மேலும் தமிழகத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:- வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Trending News