ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமானப்படுத்தியதாக பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். சூர்யாவை எட்டி மிதிபவருக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் கூறியிருந்தார். திரைத்துறையை சேர்ந்த பலரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இவ்வாறு 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் " நமது தமிழ் மண்ணும், அதில் வாழும் மக்களும் எப்போதும் அனைவரையும் வரவேற்பவர்கள் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஜெய் பீம் படத்திற்கு ஆதரவை தந்தவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
ALSO READ 'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!
1990-களில் ராஜ்கண்ணு , வீர்பலிங்கம், போன்ற பழங்குடியின மக்களின் இறப்பு, பத்மினி, அத்தியூர் விஜய போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்த்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், இன்றளவும் பழங்குடியினர் அனுபவிக்கும் துயரங்களையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவும், அவர்களின் வழிகளை பிரதிபலிக்கும் நோக்கில் தான் நான் இந்த படத்தை எடுத்தேன். இத்தகைய ஏழை, எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினரும், பல மனித உரிமை அமைப்புகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நாள்தோறும் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாது நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார். இதன் மூலம் காவல்துறையும், நீதி துறையும் ஒன்றிணைந்தால் அனைவர்க்கும் நீதி கிடைக்கும் என்பதை உணர்த்தும் நோக்கிலேயே இந்த படத்தை உருவாக்கினோம்.
மேலும் நம் தமிழக முதல்வர் ஜெய் பீம் படத்தை பார்த்து பாராட்டியதோடு, தினமும் அல்லல்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று இந்த படத்தை பார்த்து விட்டு தெரிவித்தார் . அவரின் இந்த செயலுக்கு ந மனப்பூர்வமாக எனது நன்றியினை தெரிவிக்கிறேன். இந்த படத்திற்கு அனைவரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அந்த காலண்டர் விவகாரம் இப்படி ஒரு பூகம்பத்தை கிளப்பும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 1995 காலகட்டத்தை பிரதிபலிப்பதற்காகவே நான் அந்த காலண்டரை வைத்தேன், ஒரு சமூகத்தை குறிப்பது போல் நான் அதை பயன்படுத்தவில்லை. சில வினாடிகள் மட்டுமே இடம்பெறும் அந்த காட்சியை நாங்கள் போஸ்ட் ப்ரடக்ஷன் பனியின் பொது கவனிக்கவில்லை. மேலும் அமேசான் பிரைமில் வெளியிடுவதற்கு முன்னர் பெரிய திரையில் இப்படத்தை திரையிட்டு பல்வேறு தரப்பினருக்கும் காட்டினோம். அவர்களும் அதுகுறித்து ஒன்றும் கூறவில்லை.
அனைவருக்கும் வணக்கம்... pic.twitter.com/HfrGkSGwOh
— Gnanavel (@tjgnan) November 21, 2021
மேலும் படம் ரிலீசான மறுநாள் காலண்டர் விவகாரம் குறித்து நான் சமூக வலைத்தளத்தில் தெரிந்து கொண்டு, பின்னர் அந்த காட்சியை நீக்கினேன். இந்த தவறுக்கு இயக்குநராகிய நான் தான் பொறுப்பேற்க வேண்டும், அதனால் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இத்திரைப்படத்தில் சூர்யா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பழங்குடியினர் படும் துயரங்களை பிரதிபலிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டிருந்தார். என்னால் அவருக்கு ஏற்பட்ட இத்தைகைய சிரமத்திற்கு நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
திரைப்படம் மூலம் அனைத்து தரப்பினரிடம் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன். மேலும் இப்படத்தில் மூலம் ஒரு குறிப்பிட்ட நபரையோ, அல்லது ஒரு சமூகத்தினரையோ நான் குறிப்பிடவில்லை, அந்த நோக்கமும் எனக்கு துளி கூட இல்லை என்பதை நான் மறுபடியும் தெரிவிக்கிறேன். இதனால் வேதனையடைந்தவர்களுக்கு நான் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்பேற்பட்ட இந்த நெருக்கடியில் எங்களுக்கு ஆதரவு தந்த மக்கள், திரைபிரபலன்கள், அரசியல் பிரபலங்கள், ஆகியோருக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்". என்று கூறியுள்ளார்.
ALSO READ மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் - தொடரும் ஜெய்பீம் சர்ச்சை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR