டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக்கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல.
புதுதில்லி,ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற "தமிழ் பாரம்பரியம் மற்றும் #இந்தியமொழிகள் வார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.செல்வம் அவர்கள் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். pic.twitter.com/6OmbxJtdwe
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 14, 2022
இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை பற்றி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து” என்றார்.
மேலும் படிக்க | காவி பிகினியில் தீபிகா படுகோனே - எதிர்ப்பு தெரிவித்த மத்தியப் பிரதேச அமைச்சர்
மேலும் படிக்க | அமைச்சர்களின் ஊழல் - அண்ணாமலையை வரவேற்கும் ஆ.ராசா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ