வரதட்சணை ஒழிப்பு: நூதனமாக பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 15, 2022, 08:42 AM IST
  • வரதட்சணை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
  • பொதுமக்கள் அவர்களின் செயலையும் பாராட்டினர்.
வரதட்சணை ஒழிப்பு: நூதனமாக பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞர்கள் title=

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961லிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. வரதட்சணை தடைச்சட்டத்தின்படி ஒரு குற்றமாகும். வரதட்சணை தடைச்சட்டம் (1961) இதைத்தொடர்ந்து இச்சட்டம் மணப்பெண்கள் எளிதில் மாமனார் வீட்டில் குறைகளை களைய பெண்களூக்கு சாதகமாக மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆண் உரிமைக்கழகம் பெண்கள் இதைத் தவறுதலாக பயன்படுதுவதாக எதிர்ப்புகள் கிளம்பின.

சட்டங்கள் இருந்த போதிலும் வரதட்சணை சாவுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. 2010ம் வருடத்தில் மட்டும், இந்தியாவில் 8,391 வரதட்சணை சாவுகள் (கொலை, தற்கொலை) காணப்பட்டன. ஆகையால், சில திருத்தங்களைக் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திருத்தங்கள் ஆண்களைப் பாதுகாக்கும் விதத்திலும் இச்சட்டத்தை பெண்கள் தவறாக உபயோகிக்காமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, திருமணத்தின் போது, அன்பளிப்பாக கொடுக்கப்படும், தங்க நகைகள் மற்றும் பாத்திர பண்டங்கள் போன்ற பொருட்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட் வேண்டும். மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் ஆகிய இரு தரப்பினரும் கையெழுத்திட்டு, இதற்கென நியமிக்கப்படும் வரதட்சணை ஒழிப்பு அதிகாரியிடம், ஒப்படைக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறும்பட்சத்தில், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, சிறைத் தண்டனை வழங்கப்படும்.

மேலும் படிக்க | இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!

இதற்கிடையில் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர். 

இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்ட இரு இளைஞர்களும், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக காணப்பட்ட நேரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகை தொங்க விட்ட வண்ணம் பொதுமக்களின் முன்பு தங்கள் விளம்பர பலகையை காண்பித்தும் திருமணம் செய்வதற்கு மணமகள் இருக்கிறார்களா எனக் கேட்ட வண்ணம் வலம் வந்தனர்.

தங்கள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட அட்டையில், மணமகள் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை, சாதி, மதம் தேவையில்லை எனவும் குறிப்பிட்டு அந்த அட்டையை பொதுமக்களிடம் காண்பித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என கூறியும் பணத்தைவிட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என கூறினர்.

இவர்களது நூதனப் பிரச்சாரத்தை பொதுமக்களும் இளைஞர்களும் வெகுவாக பாராட்டியதோடு, இந்த நூதன பிரச்சாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தங்கள் நூதன பிரச்சாரம் தொடர்பாக இரு இளைஞர்களும் கூறுகையில், தாங்கள் கை நிறைய சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி எனவும் சாதாரணமாக வரதட்சணை வாங்கக்கூடாது, வரதட்சணை ஒழிக என்றெல்லாம் நாம் முழக்கங்கள் எழுப்பி பிரச்சாரம் செய்தால் கிண்டலாக பொதுமக்கள் பார்க்கும் நிலை உள்ளதால், மணமகன் கோலத்தில் மக்களை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிவித்தனர். தங்களது முயற்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினர்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணமகள் .. காரணம் என்ன..!!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News