மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்து நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயி மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் விவசாயி அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 18, 2024, 11:51 AM IST
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பட்டு புடவைக்கு புகழ்பெற்றது.
  • விவசாயிகள் பரவலாக பட்டு புழு வளர்ப்பு செய்து வருகின்றனர்.
  • புழு வளர்த்து பட்டு எடுக்க மொத்தம் 27 நாட்கள் ஆகின்றனர்.
மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்து நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயி மகிழ்ச்சி title=

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் விவசாயி அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மல்பெரி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்வதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பட்டு புடவைக்கு புகழ்பெற்றது, அதன்படி திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பரவலாக பட்டு புழு வளர்ப்பு செய்து வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக சிறுநாத்தூர் கிராமத்தில் மல்பெரி பயிர் பயிரிட்டு வருகின்றனர், இது வரட்சி தாங்கும் பயிராகும், இயற்கை உரமான மாட்டு சானம், மரத்தின் தழை ஆகியவை பயன்படுத்தி பயிரிட்டு பட்டு புழு வளர்ப்பு செய்து வருகின்றனர், இந்த பட்டு புழு வளர்த்து பட்டு எடுக்க மொத்தம் 27 நாட்கள் ஆகின்றனர்.

மேலும் படிக்க | A Raja: பாஜகவில் சேருபவர்கள் பொண்டாடியை பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் - ஆ.ராசா பேச்சு! 

இந்த பட்டு புழு வளர்ப்புக்கு கிருஷ்ணகிரியில் இருந்து பட்டுப்புழு முட்டை கொண்டுவந்து பதப்படுத்தப்படுகிறது, 10 தொகுதி கொண்ட முட்டையை வாங்கி வந்து வைக்கின்றனர், அவை 3000 முதல் 5000 வரையிலான புழுக்களை உருவாக்குகிறது, முட்டை 3 நாட்கள் இருட்டு அறையில் வைக்கப்பட்டு பின்பு 7 நாட்கள் இருட்டு மற்றும் வெளிச்சம் கொண்டு மல்பெரி இலையை பொடியாக்கி 5 நாட்கள் வரை அவற்றிற்கு உணவாக பயன்படுத்தி வருகின்றனர், அதன்பிறகு அலமாரி அமைத்து  மல்பெரி இலைதண்டு 15 நாட்கள் வரை போடப்படுகிறது, பின்பு புழுக்கலானது கூடு வளையில்  மூன்று நாட்கள் வரை நூல் சுற்றும் 2  நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்டு அவற்றை ஒன்றாக சேர்த்து தர்மபுரி பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. 

இந்த பட்டு புழுவிலிருந்து வரும் பட்டு 27 நாட்களுக்கு பிறகு எடுக்கப்படுகிறது, 80 கிலோ முதல் 100 கிலோ வரை பட்டு கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர், ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையாகிறது, இதற்கு வேலை செய்ய குறைந்த ஆட்கள் இருந்தாலே போதும், பட்டு புழு வளர்ப்பதற்கு 5,000 ரூபாய் வரை செலவாகிறது, இந்த செலவினங்கள் போக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது என பட்டுப்புழு விவசாயி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | MK Stalin: முதலமைச்சர் முக ஸ்டாலின் கடுமையாக வேலை செய்து வருகிறார் - டிஆர் பாலு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News