கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 11, 2022, 03:08 PM IST
கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம் title=

கொடைக்கானல் வனசரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் கட்டு கடங்காமல் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டு தீ, காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர  வனத்துறையினர் தீவிரம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு  மச்சூர் பகுதியில், தோகை வரை என்னும் இடத்தில் தீ பற்றிக்கொண்டு எரிந்த நிலையில் இன்று  தொடர்ந்து இரண்டாவது நாளாக கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் மலை பகுதியில் மயிலாடும் பாறை என்னும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் கட்டு கடங்காமல் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனால் அரிய வகை மூலிகை செடிகளும், விலை உயர்ந்த  மரங்களும் எரிந்து சாம்பலாகின, மேலும் அரிய  வகை பறவை இனங்களும்,வன விலங்குகளும்  இடம் பெயரும் சூழ்நிலையும் தற்போது உருவாகியுள்ளது.

மேலும் படிக்க: ஆபாசமாக வீடியோ எடுத்து தமிழ் நடிகை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு

தற்போது எரிந்து வரும் காட்டு தீ மலை பகுதிகளின் மேல் பற்றி எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. காட்டு தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு தீ தடுப்பு எல்லைகள் அமைக்கப்படும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து காற்றின் வேகத்தில் தீ பரவி வருவதால் கொடைக்கானல் மச்சூர் மலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சினிமா பாணியில் கொலை..! போலீஸுக்கு துப்பு கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News