சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அந்த மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. காதலிக்காக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்த அரியலூர் இளைஞர் கொடுத்த புகாரை விசாரித்த போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் மோசடி அம்பலமானது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கொரோனா காலத்தில் ஜவுளி தொழிலில் நஷ்டம் அடைந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மோசடியில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ், இவர் தனது காதலிக்காக அரசு கிளார்க் வேலைக்காக வாங்குவதற்காக, நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான ஈரோட்டை சேர்ந்த மோகன் (வயது 47) என்பவரை அனுகியுள்ளார். கிளார்க், அலுவலக உதவியாளர் போன்ற பத்து வகையான பணிகள் வாங்கி தருகிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். பத்துவிதமான பணிகளில், ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு ரேட் சொல்லியுள்ளனர். தினேஷ் கிளார்க் பணிக்காக ஒன்பது லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட மோகன், சொன்னபடி வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை. பிறகு ஒரு நாள், வால் டாக்ஸ் சாலை பகுதிக்கு வரவழைத்த மோகன், அரசுத்துறையில் கிளார்க் பணிக்கான நியமன ஆணை என்று சொல்லி போலி நியமன உத்தரவை வழங்கிவிட்டு சென்றார்.
ஆனால், அது போலியானது என்று தெரிந்தவுடன், மோகனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக தினேஷ் சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புலனாய்வில், ஈரோட்டை சேர்ந்த மோகன் அவரது தோழி கௌசல்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க | ஜெயலலிதா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவரா...? அண்ணாமலை சர்ச்சைக்கு ஜெயகுமார் தடலாடி
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 34 போலி பணி நியமன ஆணைகள், 48 அரசுத்துறைகளின் முத்திரைகள், லேப்டாப், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மோகன் பனியன்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பது தெரியவந்தது.
தொழில் நன்றாக போய்க் கொண்டிருந்தாலும், கொரோனா காலத்தில் தொழில் முடங்கிவிட்டதால், தொழிலும் நசிந்துபோய், வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அன்றாட செலவுகளுக்கே பிரச்சனை என்ற நிலையில் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
அப்போதுதான் அரசு வேலைக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அரசுத்துறை உயரதிகாரிகள், அமைச்சர்களை தனக்கு நன்கு தெரியும் என கூறி நம்ப வைத்து, சென்னையில் வெவ்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி் மோசடியையே தொழிலாக மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இதுவரை 35 பேரை மோசடி செய்து, அவர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த மோசடிப் பேர்வழி மோகனை காவலில் எடுத்து விசாரித்தால், தமிழகத்திம் வேறு மாவட்டங்களில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களின் தகவல்களை தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ