கலகத்துக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷ் - பூஜையுடன் தொடங்கியது ‘ரிபெல்’

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் ’ரிபெல்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 06:22 PM IST
கலகத்துக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷ் - பூஜையுடன் தொடங்கியது ‘ரிபெல்’  title=

ஜி.வி பிரகாஷ் வரிசையாக படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் ஜி.வி பிரகாஷ் நடிக்கிறார். ‘ரிபெல்’ என பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் நிகேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். 

ALSO READ | மாநாடு வெற்றியால் குஷியான யுவன் - என்ன செய்தார் தெரியுமா?

படத்தின் தொடக்கவிழாவில் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் நிகேஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஞானவேல், சி.வி குமார் உள்ளிட்டோருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கௌரவ், தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி ஆகியோரும் கலந்து கொண்டனர். மூணாறு பகுதியின் அரசியல் சூழலை மையமாக வைத்து ‘ரிபெல்’ திரைப்படம் உருவாகிறது. 

படம் குறித்து பேசிய இயக்குநர் ரஞ்சித், மூணாறு பகுதியின் அரசியல் தனக்கு தெரியும் என்பதால், அதனை இந்தப் படம் பேசுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மிகச்சிறப்பான படைப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் தானும் ஒரு படம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறிய ரஞ்சித், அதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO RAED | ’ஜெய்பீம்’க்கு சர்வதேச அங்கீகாரம் - கோல்டன் குளோப் விருது பட்டியலில் இடம்

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் நிகேஷ், படப்பூஜைக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இயக்குநர் ரஞ்சித்தின் சினிமா மூலம் சினிமா என்னவென்பதை கற்றுக்கொண்டதாக கூறிய அவர், இந்தப் படத்தை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, சி.வி.குமார் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷூக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் ஞானவேல் ராஜா பேசும்போது, இந்தப் படத்தில் கல்லூரி வாழ்க்கை, அரசியல், தமிழுணர்வு என எல்லாமே இருக்கும் எனத் தெரிவித்தார். 

சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதை இப்படத்தில் இருப்பதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறினார். கதையை சரியாக சொல்வோம் எனக் கூறிய அவர், இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பேசினார். படக்குழுவினருக்கு நடிகர் ஆரி, தயாரிப்பாளர் அம்மா சிவா, இயக்குநர் நலன் குமாரசாமி உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News