தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு: புவியரசன்..

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Aug 17, 2019, 02:28 PM IST
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு: புவியரசன்.. title=

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 17 சென்டி மீட்டரும், கடலூரில் 13 சென்டி மீட்டரும், அரியலூரில் 12 சென்டிமீட்டர், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 சென்டிமீட்டர், விழுப்புரத்தில் 10 சென்டிமீட்டர், சென்னையில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை தொடரும்.

மீனவர்களுக்கு தனிப்பட்ட எச்சரிக்கை எதுவும் கிடையாது. அந்தமான் கடல் பகுதியில் தான் காற்றின் வேகம் இருக்கிறது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை. அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ மழை பெய்தது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. உறுதி செய்த பிறகு அது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிப்போம். நீலகிரியில் தற்போது கன மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Trending News