ஈரோடு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் பழுது நீங்கி புறப்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பவளக்குட்டை என்ற பகுதியில் பெங்களூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2022, 10:54 AM IST
ஈரோடு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் பழுது நீங்கி புறப்பட்டது title=

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மோசமான வானிலை காரணமாகவும் சீரான சிக்னல் கிடைக்காததாலும்   தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் கோளாறு சரி செய்யப்பட்டு கொச்சின் சென்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பவளக்குட்டை என்ற பகுதியில் பெங்களூரை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது. 

பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி சென்ற அந்த ஹெலிகாப்டரில்  பாரத்,சீலா தம்பதியினர் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளனர். ஹெலிகாப்டரை பைலட்  ஜெஸ்பால் இயக்கியுள்ளார். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பாதை வழியாக சென்ற போது மோசமான வானிலை காரணமாகவும், சரியான சிக்னல் கிடைக்காததாலும் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

ALSO READ | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு

 மலைப்பகுதி திடீரென தரையிரக்கப்பட்ட ஹெலிகாப்டரை கண்ட அப்பகுதி  பொதுமக்கள் ஏராளமானோர் ஹெலிகாப்டரை சூழ்ந்தனர். மேலும் பொதுமக்கள் கடம்பூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ | மதுரையில் செல்போன் டவர் காணவில்லை என போலீசில் புகார்!

இதனிடையே சிக்னல் கிடைத்ததையடுத்து ஹெலிகாப்டர் கொச்சின் புறப்பட்டு சென்றது.. திடீரென தரையிங்கிய ஹெலிகாப்டரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ALSO READ | தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு எவையெல்லாம் இருக்கும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News