காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை என்று பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்..!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு டெல்லியில் உள்ள BJP அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்.... “இன்று நான் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதற்கான முக்கிய காரணம் மாநில பாஜக தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் தான். அவர் எடுத்த முயற்சியின் காரணமாக தான் என்னால் இந்த கட்சியில் சேர முடிந்தது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ALSO READ | தமிழகத்தில் தொடரும் பாஜக அதிரடிகள்... தாமரை மலர்ந்தே தீருமா..!!!
மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் சேர்ந்துள்ளேன். பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை. காங்கிரசில் இருந்தபோது மனசாட்சியின்றிதான் பாஜகவை விமர்சித்தேன். வேளாண் சட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான். இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டித்தான் வந்துள்ளேன். ரூ.2 வாங்கி என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர் தான். எனது அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி. காரணம் என்று கூறக்கூடாது. பெண் ஒருவர் புத்திசாலியாக இருக்கக்கூடாது என நினைத்தனர். நடிகை என கூறியவர் தலைவர் வேடத்தில் நடிக்கிறார். பாஜகவில் சேருவதற்கு கணவர் சுந்தர்.சி. காரணமில்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு குஷ்பு விளக்கம் அளித்தார்.
திமுகவில் இருந்து வெளியேறிய போது நான் குற்றச்சாட்டுகள் எதுவும் வைக்கவில்லை. காங்கிரசில் இருந்து வெளியேறிய போதும் நான் குற்றச்சாட்டு எதுவும் வைக்கவில்லை. ஆனால், நான் வெளியேறிய பிறகு என்னைப் பற்றி தவறாக பேசியவர்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். காங்கிரஸ் சார்பாக என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் கட்சி அலுவலகமான கமலாலயம் சென்ற நிச்சயம் பதில் அளிப்பேன்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.