கஞ்சா வழக்கில் கடமை தவறிய காவல் துறை ஆய்வாளர் படை இடை நீக்கம்..!!!

வாணியம்பாடியில் கஞ்சா வழக்கு தொடர்பாக தலைமறைவான குற்றவாளிகளை உரிய நேரத்தில் கைது செய்ய தவறிய நகர காவல் துறை ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2021, 11:29 AM IST
  • ஜூலை மாதம் 26ம் தேதி காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கஞ்சா வழக்கு தொடர்பாக சோதனை நடத்தினார்.
  • முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உட்பட 2 பேர் தப்பி தலைமறைவானர்.
  • மஜக நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார்.
கஞ்சா வழக்கில் கடமை தவறிய காவல் துறை ஆய்வாளர் படை இடை நீக்கம்..!!! title=

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டீல் இம்தியாஸ் என்பவர் கிடங்கில் கஞ்சா பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நடத்திய சோதனையின் 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன் கிடங்கில் பதுங்கி இருந்த 3 பேரை கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உட்பட 2 பேர் தப்பி தலைமறைவானர். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (வெள்ளிக்கிழமை) மாலை மஜக நிர்வாகி வசீம் அக்ரம் தன்னுடைய 7 வயது மகன் உடன், வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலக்கு சென்று தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டு இருந்த போது, 7 பேர் மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனால், வாணியம்பாடியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ALSO READ | தமிழகத்தில் 1-8ம் வகுப்புகள் எப்போது திறக்கும்; அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

 

இதை அடுத்து கஞ்சா வழக்கில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து, தலை மறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் வசீம் அக்ரம் படுகொலையை தவிர்த்து இருக்கலாம் என கருத்து தெரிவித்த, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் துறை மெத்தன போக்கு தான் இந்த படுகொலை சம்பவத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினர்

இதன் அடிப்படையில் 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இன்று வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்த சாமியை, பணி இடை நீக்கம் செய்ய வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது போன்ற சம்பவங்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என உறுதி அளித்துள்ளார். 

ALSO READ | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News