பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா? நேரு கேட்டால் ஸ்டாலின் தட்ட வாய்ப்பே இல்ல

K.N. Nehru: திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் இம்முறை அந்த தொகுதியில் நேரடியாக களம் காண இருக்கிறது. வேட்பாளர் யார்? என்பது தான் சூடான தகவல்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2024, 06:56 PM IST
  • பெரம்பலூர் தொகுதியில் யார் வேட்பாளர்
  • கேஎன் நேரு மகன் போட்டியிட விருப்பம்
  • திமுக தலைமை எடுக்கும் முடிவு என்ன?
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா? நேரு கேட்டால் ஸ்டாலின் தட்ட வாய்ப்பே இல்ல title=

கே.என்.நேரு தன்னுடைய மகன் அருண் நேருவை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்புகிறார். கடந்த முறையே அருண் நேருவை போட்டியிட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இம்முறை நேரு விடுவதாக இல்லை. திமுகவில் இருக்கும் பல மூத்த தலைவர்களின் மகன்கள் எல்லாம் எம்பி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், தன்னுடைய மகனுக்கும் எம்பி சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். அதற்கு ஏற்றார்போல், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களில் 47 மனுக்கள் அருண் நேரு போட்டியிட வேண்டும் என கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டியிருப்பதால் அதனை வைத்தே இறுதி முடிவை திமுக தலைமை எடுக்க இருக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் குழுவிலும் நேரு தான் இருக்கிறார். அதனால், பெரம்பலூர் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் இருக்க அவர் தீர்மானமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் நேரு கேட்டால் தட்டாமல் ஓகே சொல்வார் என்பது தான் நிதர்சனமான உண்மை. 

மேலும் படிக்க | திமுகவில் 5 சிட்டிங் எம்பிகளுக்கு சீட் கன்பார்ம் - எந்தெந்த தொகுதிகள்?

எனவே, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு தான் திமுக வேட்பாளராக களமிறங்குவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அந்த தொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர் இம்முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்று வேட்பாளராக களமிறங்க இருக்கிறார். அவருக்கு போட்டியாக தான் அருண் நேரு திமுக சார்பில் நிறுத்தப்பட இருக்கிறார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்றாலும் அமைச்சர் நேரு, தன் மகனின் வெற்றியை உறுதி செய்துவிடுவார் என்று சொல்கின்றனர் உடன்பிறப்புகள். அதனால், பெரம்பலூர் தொகுதியில் இப்போதே திமுக உடன்பிறப்புகள் சுறுசுறுப்பாக பணியாற்ற தயாராக இருக்கின்றனர்.

இம்முறை திருச்சி தொகுதி யாருக்கு?

பெரம்பலூரில் திமுக போட்டியிடுவதால் திருச்சியில் யார் போடியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி தொகுதி எம்பியாக இருக்கும் திருநாவுக்கரசர் மீது மக்கள் அதிருப்தியாக இருப்பதால் மதிமுகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். மதிமுக சார்பில் துரை வைகோ அந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், மாநிலங்களவை சீட் வேண்டும் என மதிமுக கேட்டுக் கொண்டிருப்பதால், திமுக - மதிமுக தொகுதி பங்கீடு இறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது.

மேலும் படிக்க | மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News