நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தொண்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று மதுரை செல்லூர் பகுதியில் அதிமுகவின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன் போன்றோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண் நிர்வாகிகளும் ஆண் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பெண்கள் பேசிக்கொண்டே இருந்ததால், திடீரென எழுந்து வந்த செல்லூர் ராஜு, வெளியே செல்வது என்றால் சென்று விடுங்கள், நாங்கள் சொல்லக்கூடிய ஆலோசனைகளை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | எடப்பாடியின் போட்டோவை காட்டி சவால் விட்ட அமைச்சர் உதயநிதி
இப்போது வெளியே செல்லாமல் நான் பேசும் பொழுது நீங்கள் எழுந்து சென்றாள் ரத்தம் கக்கி சாவீர்கள் என்று சொல்லி அவரும் சிரித்தார், இதனை கேட்ட சக நிர்வாகிகளும் சிரித்தனர். பின்பு பேசிய செல்லூர் ராஜு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் வெற்றி பெற்ற வெங்கடேசன் மக்களை சந்திக்கவே இல்லை. எந்த விதத்திலும் மதுரை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவில்லை. ஆனால் நமது வேட்பாளர் மருத்துவர் சரவணன் சிரித்த முகத்தோடு நன்கு பழகக் கூடியவர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனால் மதுரை மக்களுக்கு பல நன்மைகளை செய்ய காத்திருக்கிறார். அதை காரணத்தினால் அவரை வீடுதோறும் சென்று பெண்கள் ஆகிய நீங்கள் தான் அறிமுகப்படுத்த வேண்டும், அவரை வெற்றி வேட்பாளராக மாற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்த செல்லூர் ராஜு, வெற்றி வாய்ப்புகள் எங்களுக்கு மிகவும் பிரகாசமாக. மதுரைக்கு 8000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி செய்துள்ளது. எங்களின் பத்தாண்டு கால சாதனையை மக்களிடத்தில் கூறி வாக்குகள் சேகரிப்போம். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை, மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்திக்கவே இல்லை. அதிமுக மேற்கொண்டு வந்த வளர்ச்சி திட்ட பணிகளை திமுகவின் சாதனை போல ஸ்டிக்கர் ஒட்டி மதுரை எம்பி செய்து வந்தார் அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி: அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ