அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?

Lok Sabha Elections 2024 ADMK Manifesto : நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Mar 22, 2024, 11:53 AM IST
  • மக்களவை தேர்தல் 2024 அதிமுக தேர்தல் அறிக்கை
  • மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த வலியுறுத்தும்..
  • வேறு என்னென்ன முக்கிய அம்சங்கள்?
அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன? title=

Lok Sabha Elections 2024 ADMK Manifesto : நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த வலியுறுத்தப்படும் என்பதில் இருந்து, சென்னையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நியமிக்கப்படும் என்பது வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

>மகளிர் உரிமைத் தொகையாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும் 

>குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களை உட்படுத்த வலியுறுத்தல்

>ஆளுநர் பதவி நியமன முறை குறித்து கருத்து கேட்க வேண்டும்

>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தல்

>குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தல்

>உச்சநீதிமன்றக் கிளை சென்னை அமைக்க வலியுறுத்தல்

>நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்

>100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்தும்.

இவற்றுடன் சேர்த்து, அதிமுக தேர்தல் அறிக்கையில், 133 வாக்குறுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய சிறப்பம்சங்கள் மட்டும், இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதிமுக கட்சியின் வேட்பாளர்கள்:

மக்களவை தேர்தல் 2024 தமிழகத்தில் வரும் ஏப்ரம் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக கட்சியும் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அவர்கள் யார் யார் என்ற முழு விவரம், இதோ!

வேட்பாளர்கள் பட்டியல்:

1.சென்னை வடக்கு-இரா.மனொகந்ர்
2.சென்னை த்ற்கு-ஜெ.ஜெயவர்தன்
3.காஞ்சிபுரம்-இ.ராஜசேகர்
4.அரக்கோணம்-ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி-வி.ஜெயபிரகாஷ்
6.ஆரணி-ஜி.வி.கஜேந்திரன்
7.விழுப்புரம்-ஜெ.பாக்கியராஜ்
8.சேலம்-பி.விக்னேஷ்
9.நாமக்கல்-தமிழ்மணி
10.ஈரோடு-ஆற்றல்ல் அசோக் குமார்
11.கரூர்-கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம்-சந்திரகாசன்
13.நாகப்பட்டினம்-ஜி.கர்சித் சங்கர்
14.மதுரை-பி.சரவணன்
15.தேனி-வி.டி.நாராயனசாமி
16.ராமநாதபுரம்-பா.ஜெயபெருமாள்

மேலும் படிக்க | லோக்சபா தேர்தல் 2024: கண்டுக்கொள்ளாத பாஜக.. கை விட்ட இந்தியா கூட்டணி.. வருண் காந்திக்கு நேர்ந்த நிலை..

2ம் கட்ட அதிமுக  வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

1.ஸ்ரீபெரும்புதூர்-பிரேம்குமார்
2.வேலூர்-பசுபதி
3.திருவண்ணாமலை - கலியபெருமாள் 
4.தருமபுரி - அசோகன்
5.நீலகிரி - தமிழ்செல்வன்
6.மயிலாடுதுறை - பாபு 
7.கள்ளக்குறிச்சி - குமரகுரு
8.திருப்பூர் - அருணாச்சலம்
9.கோவை - ராமச்சந்திரன்
10.பொள்ளாச்சி - அப்புசாமி என்கிற கார்த்திகேயன்
11.திருச்சி - கருப்பையா
12.பெரம்பலூர் - ஏடி சந்திர மோகன்
13.சிவகங்கை - மணக்குடி சேகர் தாஸ்
14.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
15.நெல்லை -சிம்லா முத்து சோழன்
16.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
17.கன்னியாகுமரி - பசிலியான் நசரேத்
18.விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி 

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதியும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 33 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. 

தேமுதிக போட்டியிடும் ஐந்து தொகுதிகள்

திருவள்ளூர் (தனி)
மத்திய சென்னை
கடலூர்
விருதுநகர்
தஞ்சாவூர் 

புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகள் தென்காசி 

எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் தொகுதிகள் திண்டுக்கல் 

மக்களவைத் தேர்தல் நிலவரம்:

இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதேநேரத்தில் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் எப்பொழுது?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 27 ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | Thangar Bachan: பாமக வேட்பாளர்கள் பட்டியல்-கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News