செஸ் ஒலிம்பியாட் தொடர் முதல்முதலாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரான இது மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடக்கிறது. எனவே பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழகத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். இதனையடுத்து அவர்களுக்கான அறை ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களை எந்த சொதப்பலும் இல்லாமல் செய்திருக்கிறது அரசு. தமிழக அரசின் ஏற்பாடுகளை பார்த்த சர்வதேச வீரர்கள் பலரும் இதுபோல் ஏற்பாடை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை என புகழாரம் சூட்டுகின்றனர்.
இதற்கிடையே செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடக்குமென்றும் இதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தின் மூலம் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
#WATCH PM Narendra Modi arrives in Chennai, to declare open the 44th Chess Olympiad shortly
(Source: DD) pic.twitter.com/oBElmIxiey
— ANI (@ANI) July 28, 2022
இதனையடுத்து நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த தொடக்க விழாவில் மோடி கலந்துகொண்டார். மேலும் அந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
#ChessOlympiad | Five-time world chess champion Viswanathan Anand hands over the Olympiad torch to PM Narendra Modi and Tamil Nadu CM MK Stalin.
The torch was then handed over to young Grandmaster R Praggnanandhaa and others at Jawaharlal Nehru Stadium in Chennai. pic.twitter.com/iPcMh4rBoK
— ANI (@ANI) July 28, 2022
முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தமிழக அரசு வேண்டுமென்றே புறக்கணிக்கிறதென பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டியதும், தமிழ்நாடு அரசு செய்த விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சென்னை வந்தடைந்தார் மோடி - உற்சாக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ