திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளிதழின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் படத்துடன் புத்தாண்டு வாழ்த்தையும் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஹேக்கர்கள் அந்த முகப்பு பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, முடக்கப்பட்டுள்ள முரசொலி இணையதள பக்கத்தை சீரமைத்து வருகின்றனர் தொழில்நுட்ப குழுவினர்.