நாமக்கல்லில் பட்டாசு விபத்து : 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பெண் - 4 பேர் உயிரிழப்பு

Fireworks accident in Namakkal : நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2022, 11:13 AM IST
  • ஒரு பெண்ணின் உடல் வீட்டில் இருந்து 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.
  • தீயணைப்பு துறை விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
  • 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல்லில் பட்டாசு விபத்து : 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பெண் - 4 பேர் உயிரிழப்பு title=

Namakkal Firework Accident : நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெரு பகுதியில் தில்லை குமார்‌ என்பவர் வீட்டில் பட்டாசு கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.‌ இந்நிலையில் இன்று (டிச. 31) நள்ளிரவு புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது.‌ 

இந்த சூழ்நிலையில் இந்த பட்டாசுகள் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அதிக சத்தத்துடன் திடீரென வெடித்து சிதற தொடங்கியது.இதில் தில்லைகுமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி  மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த  பெரியக்காள் என்பவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 

மேலும் படிக்க | டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

குறிப்பாக ஒரு பெண்ணின் உடல் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. சம்பவம் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பட்டாசு விபத்தில் சிக்கிய 5 பேரை படுகாயங்களுடன் மீட்ட தீயணைப்புத்துறையினர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 10க்கும்‌ மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மைனர் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தந்தை தட்டிக் கழிக்க முடியாது: நீதிமன்றம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News