சென்னை: புதுச்சேரியில் பா.ஜ.க.வின் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை எதிர்த்து கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் – பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 16 தொகுதிகளை கைப்பற்றியது.
10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி புதுச்சேரி முதல்வராக மே 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Also Read | புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- ஆளுநர் தமிழிசை பதில்
கொரோனா பாதித்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு 3 எம்.எல்.ஏக்களை நியமனம் செய்தது. கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக் வேண்டும் என்று, புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த பொதுநலன் மனுவில், “சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகள் தான்நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது.
அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு,பாஜகவின் 3பேரை எம்எல்ஏக்களாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்து, பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தது.
Also Read | History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR