புதுவை நியமன MLA-க்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என சபாநாயகக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டடுள்ளது!
புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன MLA-க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரின் நியமனம் செல்லாது என புதுவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA லட்சுமிநாராயணன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் MLA-க்களின் நியமனும் செல்லும் என தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்கா வந்த நியமன MLA-க்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி மறுத்தார்.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 19-ஆம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன MLA-க்களை அனுமதிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.