இரு தினங்களுக்கு முன்னர் புதுவை ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா(Coronavirus) வைரஸ் தொற்று நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் காரணமாக மக்கள் தினம் தினம் பலர் இறந்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர், ஆனால் இதுவரை சரியான பலன் எதுவும் கிடைக்கவில்லை.
READ | அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் - புதுவை முதல்வர் உறுதி!
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு மூழு அடைப்பு விதிகளை அறிமுகம் செய்தது, எனினும் பலன் கிடைக்கவில்லை. அதாவது மூன்று மாத முழு அடைப்பு விதிமுறைகளும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. மாறாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்ட பல முன்னணி போராளிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அந்த வகையில், புதுச்சேரி(Pudhucherry) துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது அறிக்கைகள் அவருக்கு கொரோனா இல்லை என தெளிவுபடுத்தியது.
ஒரு நாள் முன்னதாக புதுவை ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை அடுத்து ஆளுநர் மாளிகை கிருமி நீக்கத்திற்காக அடைக்கப்பட்டது. மேலும் ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சோதனை முடிவு வெளியானது.
READ | புதுவையில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று...
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆளுநரின் கொரோனா பரிசோதனை முடிவுகளை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா புள்ளிவிவரங்கள் படி, பிராந்தியத்தில் 1151 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 584 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர், 14 பேர் தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.