நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி!

-

Last Updated : Feb 25, 2018, 04:05 PM IST
நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி! title=

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார் அப்போது அங்கு பேசிய அவர்:-

முத்ரா கடன் திட்டத்தை புதுச்சேரி இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அரசு நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறதா? நம் அனைவரும் புதிய இந்தியா உருவாக வேண்டும்.

ஒரே குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 48 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி செய்துள்ளது. 48 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் செய்ததையும்,  48 மாதங்கள் ஆட்சியில் பாஜக அரசு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது 

ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்த அரவிந்த் கோஷை ஆரத்தழுவிக் கொண்டது புதுச்சேரி பாரதியும் தேசியக்கவியாக உருவெடுத்தது இங்கு தான். புதுச்சேரி ஏன் பின்னடைவு அடைந்தது என காங்கிரஸ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும்.

ஜந்தன் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ஒன்றரை லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஜவுளித்துறையில் செழித்துக் கொண்டிருந்த புதுச்சேரி தன் மினு மினுப்பை இழந்து விட்டது.

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை முழுவதுமாக நொடிந்து போய் விட்டது. புதுச்சேரி ஏன் பின்னடைவு அடைந்தது என காங்கிரஸ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும். புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து, ரூ 1,800 கோடி ஒதுக்கியுள்ளது. புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாகமாக்க மத்திய அரசு உதவி செய்யும். புதுச்சேரியில்தான் பிரதமர் மத்திய ஜன் தன் யோஜனா திட்டம் 100% நிறைவேறியுள்ளது.

125 கோடி மக்கள் சபதமேற்று நாட்டின் முன்னேற்றத்தை காண பாடுபட்டு வருகின்றனர். புதிய புதுச்சேரி உருவானால்தான் புதிய இந்தியா உருவாக முடியும். இதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Trending News