சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக மழை வெள்ளத்தினால் மூழ்கும் நிலை ஏற்பட்டது. பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மென்மேலும் மோசமடைந்தது.
ALSO READ கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்
மேலும் தமிழகத்தில் பெய்து வந்த தொடர்மழை காரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழை நீரால் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டிடத்திற்கு முன்னர் முழங்கால் அளவிற்கு மழை சூழ்ந்து இருந்தது. மேம்பாலங்களும் கார் பார்க்கிங்காக மாறியது இங்குதான். இரவு முழுவதும் விடாமல் பெய்த கனமழையால் வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது. இதனால் சமீபத்தில் திறக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் அலுவலகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஆரஞ்சு அலார்ட், ரெட் அலார்ட் என மழை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னை மாநகரை பதம் பார்த்த மழை டெல்டா மாவட்டங்களையும் விட்டுவைக்காமல் ஒரு கை பார்த்துவிட்டது. விவசாயத்திற்காக பயிரிடப்பட்ட பயிர்கள் யாவும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மையம் கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேலும் சென்னைக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலட்டும் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் நாளை கனமழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு மிதமான மழை மற்றும் காற்று வீசும் என்று கூறியுள்ளது.
Heavy Rains over Tamil Nadu and Andhra likely to decrease from tomorrow as the Depression enters into land today and weakens subsequently. Today's rainfall activity will be more over Andhra Pradesh.#HeavyRains #ChennaiRains #TNRains pic.twitter.com/cJvZ6JW4jS
— India Meteorological Department (@Indiametdept) November 11, 2021
ALSO READ சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR