NPR அவசியம், அப்போதான் யார் வெளிநாட்டவர் என தெரியவரும்: ரஜினி!

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Feb 5, 2020, 11:31 AM IST
    1. CAA-ல் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள்.
    2. NPR அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.
    3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை.
    4. மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.
    5. இஸ்லாமியர்களுக்கு ஏதாவது நடந்தால் முதல் ஆளாக நானே வந்து நிற்பேன்.
    6. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.
    7. இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது.
NPR அவசியம், அப்போதான் யார் வெளிநாட்டவர் என தெரியவரும்: ரஜினி! title=

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர் என தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக இன்னமும் நோட்டீஸ் வரவில்லை. சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். CAA-வால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்பட்டுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  சம்பவம் தொடர்பாக வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் ரஜினி காந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் ரஜினிக்கு நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதை தொடர்ந்து, சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்.... "நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்யவில்லை. சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் ஒரு போராட்டத்தில் இறங்குவதற்கு முன்பு யோசித்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்குத்தான் பிரச்னை. 

NPR அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன்" என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  

 

Trending News