பொறியாளர் சுவாதி ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியாதாவது:-
ராம்குமாரின் மரணத்திற்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. ராம்குமாரின் மரணம், வழக்கை விரைவில் முடிப்பதற்கான முயற்சியாக தோன்றுகிறது.
சிறையில் பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் நிலையில் ராம்குமாரின் உயிரிழப்பு சந்தேகம் அளிக்கிறது.
சிறையில் நிகழும் மர்மங்களுக்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு. நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் சிறையில் அடைக்கும்போது மட்டும் எப்படி உடல்நிலை சரியில்லாமல் போகிறது?
அனைத்து சிறைகளிலும் வயர்கள் வெளியில் இருக்கும்படி இருக்காது. சுவற்றில் பதிக்கப்பட்ட நிலையில்தான் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ராம்குமாரின் மரணம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது. அவரது மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.