அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்; உலக சாதனை நிகழ்த்திய சேலத்துப் பெண்கள்

Food Festival in Salem: அடுப்பில்லா அதிவேக ஆரோக்கிய சமையல் என்ற தலைப்பில் 250 பெண்கள் 3 நிமிடங்களில் 500 வகையான உணவுகளை தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 16, 2022, 04:24 PM IST
  • சூப்பர் சிங்கர் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய உணவு திருவிழா.
  • சேலம் மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் சைவ அசைவ உணவு அரங்குகள்.
  • நிகழ்ச்சியில் உலக சாதனை சமையல் கலைஞர் செஃப் தாமு பங்கேற்பு.
அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்; உலக சாதனை நிகழ்த்திய சேலத்துப் பெண்கள் title=

சேலம் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் "உகந்த உணவு திருவிழா" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் சிங்கர் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த உணவு திருவிழாவில், உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள் மற்றும் சேலம் மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் சைவ அசைவ உணவு அரங்குகள் மற்றும் அரசு துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து உகந்த உணவு திருவிழாவில், 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. இதில் முதலாவதாக அடுப்பில்லா அதிவேக ஆரோக்கிய சமையல் என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 250 பெண்கள் எவ்விதமான அடுப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தாமல் 3 நிமிடங்களில் 500 வகையான உணவுகளை தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினர். 

மேலும் படிக்க | உங்களுக்கு டீ பிடிக்கலாம்: ஆனால் தேநீருக்கு இந்த பொருட்களை பிடிக்காது

இதையடுத்து சேலம் பகுதியைச் சேர்ந்த நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர் களையும் நுகர்வோரை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 200 கிலோ எடை அளவில் உலகின் மிகப்பெரிய அச்சுவெல்லம் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டது. இதேபோல் 3.5 அடி உயரம், 2.5 அடி அடிப்பாக விட்டம், 3.5 ஆதி மேல்பாக விட்டம் கொண்ட உலகின் மிகப்பெரிய குண்டு வெல்லம் தயாரித்து காட்சி படுத்தினர். தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான கண்டு களித்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவினை ருசித்ததோடு உலக சாதனையும் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை சமையல் கலைஞர் செஃப் தாமு, இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News