ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தள்ளுபடி செய்தது. மேலும், நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, முன்னாள் தலைமை செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், உறவினர்கள் தீபா, விவேக் ஜெயராமன், தீபக் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சிலர் சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் வழங்கிருப்பதினால் அவர் ஆணையத்தில் நேராகவோ வக்கீல் மூலமாகவோ ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பிரமாண பத்திரம் மூலமாகவோ வாக்குமூலத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.