சாத்தான்குளம் வழக்கு: மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்..!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated : Jul 12, 2020, 01:53 PM IST
சாத்தான்குளம் வழக்கு: மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம்..! title=

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்தனா். இது தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் CBCID போலீஸாா் வழக்கை விசாரித்துவந்தனா். இதுதொடா்பாக ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். 

இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களையும் CBCID போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை CBCID மாற்றப் பரிந்துரைத்தது. இதை ஏற்று டெல்லி CBI அதிகாரிகள் கடந்த 7 ஆம் தேதி வழக்குப் பதிந்தனா். வழக்கு விசாரணை அதிகாரியாக டெல்லி CBI கூடுதல் எஸ்பி விஜயகுமாா் சுக்லா நியமிக்கப்பட்டாா். அவா் தலைமையில் 8 போ் அடங்கிய குழுவினா் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரைக்கு வந்து, அங்கிருந்து காரில் தூத்துக்குடி CBCID அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு வழக்கு ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்நிலையில், CBI கூடுதல் எஸ்பி விஜயகுமாா் சுக்லா தலைமையில் பெண் அதிகாரி உள்ளிட்ட 7 அதிகாரிகள் திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்துக்கு சனிக்கிழமை முற்பகல் வந்தனா். அவா்கள் வியாபாரிகள் கொலை வழக்கு தொடா்பான விசாரணையைத் தொடங்கினா். 

READ | PM Kisan Samman Nidhi-யின் அடுத்த தவணை 2000 ரூபாய் எப்போது வங்கியில் வரும்?

இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துறை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி SP நடவடிக்கை எடுத்துள்ளார்.

Trending News