திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் காந்தி கிராம நிறுவன பவள விழா இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வரும் மோரி அங்கிருந்து மூன்று மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு செல்கிறார். அங்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
அதன் பின் அங்கிருந்து கார் மூலம் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனையடுத்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்கும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் பிரதமர் விசாகப்பட்டினத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரின் வருகையையொட்டி 4,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க | கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம்
மேலும் படிக்க | பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ