Senthil Balaji Prisioner Number: தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்திவந்தனர். இந்த நிலையில், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி..
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததாக ஓமந்தூரார் மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் அமைச்சர்கள் உள்பட பலருக்கு
போலீஸாரின் அனுமதியின்றி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. 17 மணி நேரம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது செந்தில் பாலாஜி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக பல அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் பாஜக கட்சியின் மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: நீதிபதி சக்திவேல் விலகிய காரணம் என்ன?
நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி..
செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது சரியில்லாததால் வரும் 28ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவனையில் கடுமையான காவல்துறை கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து, இவரது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் வாங்கும் முயற்சியில் திமுக கட்சியினர் மற்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் ஆகியோர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புழல் சிறையில் அடைக்கப்படுகிறாரா?
செந்தில் பாலாஜியின் உடல்நிலை தேறியவுடன் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கான கைதி எண், வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, துணை ராணுவ அதிகாரிகளின் காவல் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் என் மற்றும் சிறை கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டினை சுற்றி பாதுகாப்புக்காக ஏராளமான ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியை பார்க்க வரும் பார்வையாளர்கள் புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது எண்: 001440 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு..
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து, அவரது மனைவி மேகலா கரூரில் இருந்து சென்னைக்கு விரைந்தார். பின்னர், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். அதில், செந்தில் பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைப்பெற இருந்தது. ஆனால், இதை விசாரிக்க இருந்த நீதிபதி அமர்வு குழுவின் முக்கிய உறுப்பினர் ஆர்.சக்திவேல் திடீரென விலகினார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ