சென்னை செயலக காலனி காவல் நிலையம் ஒரு வினோதமான வழக்கை எதிர்கொண்டுள்ளது. ஆம் செருப்பை திருடிய திருடர்களை கண்டுபிடித்து தருமாறு ஒரு புகாரை சந்தித்துள்ளது...
சென்னை கீழ்பாக்கம், திவான் பகதூர் சன்முகம் தெருவை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சுமார் 75,000 மதிப்புள்ள செருப்பு மற்றும் சூ-க்கள்(10 ஜோடி) திருடு சென்றதாகவும், அதனை கண்டு பிடித்து தருமாறும் புகார் எழுந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி இச்சம்பவம் ஆனது கடந்த சனி அன்று நடைப்பெற்றதாகவும், குறிப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் திருட்ட சம்பவம் நடைப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆதாவது சம்பவ தினத்தன்று காலை 9.30 மணிக்கு செருப்பு ஜோடிகள் வீட்டில் இருந்ததாகவும், 10.30 மணியளவில் காணாமல் போனதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட இந்த சமையத்தில் பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டிலேய இருந்ததாகவும், முதன்மை கதவினை மூடி வைத்திருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது புகாரில் அவர் மேலும் குறிப்பிடுகையில்., தனது வீட்டின் அடுத்துள்ள இளைஞர்கள் சிலர் தனது காலணிகளை திருடியிருக்கலாம் எனவும், வீட்டு வேலை பார்க்க வரும் நபர்கள் காலணிகளை திருடியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில்., இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை. முதல் கட்ட விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் சந்தேக பட்டியலில் இருக்கும் நபர்களுடன் விசாரணை நடைப்பெற்று வருகிறது. சம்பவ நாள் அடுத்த நாள் ஞாயிறு என்பதால் அடுக்கு மாடி குடியிருப்பு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை, மேலும் குறித்த இளைஞர்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். திங்களன்று இவர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் CCTV வீடியோ காட்சிகளை பெற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.