செப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்!! எந்தந்த வழித்தடத்தில் இயங்கும்- முழு பட்டியல்

செப்டம்பர் 7 முதல் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2020, 06:42 AM IST
செப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்!! எந்தந்த வழித்தடத்தில் இயங்கும்- முழு பட்டியல் title=

சென்னை: செப்டம்பர் 7 முதல் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) புதன்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. செப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க தமிழக அரசு (TN Govt)  சார்பில் அனுபதி கேட்கபட்டதை அடுத்து, 6 சிறப்பு ரயில்களை (Special Trains Listed) இயக்க இந்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுபாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக 6 சிறப்பு ரயில்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும்.

சென்னை-கன்னியாகுமரி, 
சென்னை-மேட்டுப்பாளையம், 
சென்னை-செங்கோட்டை, 
சென்னை எழும்பூர்-மதுரை 
சென்னை எழும்பூர் - திருச்சி
சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி

ALSO READ | 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே...

செப்டம்பர் 15 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

அன்லாக் 4 கட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் வழிபாட்டு தலங்கள் திறப்பது, பொது போக்குவரத்து அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

No description available.

No description available.

No description available.

 

Trending News