அன்று ராமர், சீதை, இலக்குவன் ஆகியோர் 14 ஆண்டு கால வனவாசத்தை முடித்து நாடு திரும்பினர். இன்று அவர்களின் சிலைகள் 40 ஆண்டு கால வனவாசத்தை முடித்து நாடு திரும்பவுள்ளன. அவர்கள் இலங்கையிலிருந்து திரும்பினார்கள். சிலைகள் இங்கிலாந்திலிருந்து திரும்பவுள்ளன.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட ராமர், இலக்குவன் மற்றும் அன்னை சீதை ஆகியோரின் பண்டைய சிலைகளை இங்கிலாந்து திருப்பி கொடுத்துள்ளது.
4 தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கோவிலில் (Tamil Nadu Temple) இருந்து திருடப்பட்ட ராமர், இலக்குவன் மற்றும் அன்னை சீதை ஆகியோரின் மூன்று சிலைகள் செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் போலீசாரால் (Britain Police) இந்திய அரசுக்கு திருப்பி கொடுக்கப்பட்டன.
இந்த தகவல் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகளின் உண்மையான வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்த ஒரு தொல்பொருள் சேகரிப்பாளர் தானே இந்த சிலைகளை திருப்பித் தர முன்வந்தார்.
லண்டனில் (London) உள்ள உயர் ஆணையர் பணியகத்தில், மூன்று சிலைகளையும் ஒப்படைக்க நடைபெற்ற நிகழ்வில், டிஜிட்டல் ஊடகம் வழியாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல் (Prahlad Patel) கலந்து கொண்டார். இந்த சிலைகள் 1978 இல் திருடப்பட்டன. அதன் பின்னர் தமிழக காவல்துறை (Tamil Nadu Police), லண்டன் பெருநகர போலீசாருடன் சேர்ந்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த சிலைகளை அநாமதேய தொல்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் வாங்கியுள்ளார். 1950 ல் வரையப்பட்ட சிலைகளின் உருவங்களுடன் பொருந்திய பின்னர், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் (Nagapattinam) மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து திருடப்பட்ட விஜயநகர காலத்தின் சிலைகள் இவைதான் என்று கண்டறியப்பட்டது.
லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் நடைபெற்ற விழாவில், COVID-19 காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களே அழைக்கப்பட்டனர். விழாவில், லண்டனில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் பூசாரிகள் சிலைகளுக்கு பூஜைகளை செய்து பின்னர் சிலைகளை இந்திய அரசாங்கத்திடம் (Indian Government) ஒப்படைத்தனர்.
இங்கிலாந்திற்கான இந்திய உயர் ஆணையர் (Indian High Commissioner) காயத்ரி இசார் குமார் கூறுகையில், “இன்று இந்த அழகிய சிலைகளின் தேடல் நிறைவடைந்துள்ளது. இந்த சிலைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு முன்பு, இவை மரியாதையுடன் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்பினோம்.” என்றார்.
ALSO READ: நான் அயோத்தி…. சரயு நதிக்கரையில் வரலாற்றின் சாட்சியாக நிற்கும் புண்ணிய பூமி!!
அவர், "அருங்காட்சியகங்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் அவர்களின் சேகரிப்புகளை ஆராய்ந்து, இந்திய கடவுள்களின் சிலைகளை இந்திய மக்களுக்கு திருப்பித் தர உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார். இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த சேகரிப்பாளர் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் ரசிகர் என்று கூறப்படுகிறது.
பெருநகர காவல்துறையின் டிம் ரைட் கூறுகையில், "இந்த சிலைகளை இந்தியாவுக்கு ஒப்படைப்பது இரண்டு நோக்கங்களுக்காக – ஒன்று இணக்கமான இணைப்புகள் மற்றும் உறவு, மற்றொன்று, கலாச்சார பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளித்தல். இது திருட்டு சம்பவங்களைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்த வழக்கின் முடிவு வேறு ஏப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் நமக்குக் கிடைக்கும்.
ராமர், லட்சுமணர், அன்னை சீதா ஆகியோரின் சிலைகளை இங்கிலாந்து காவல்துறை இந்திய உயர் ஆணையரிடம் ஒப்படைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் படேல், இங்கிலாந்து காவல்துறை, தமிழக அரசு (Tamil Nadu Government), இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மற்றும் லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் (Indian High Commission) ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தார்.
ALSO READ: பூலோக சொர்க்கம், ராமர் அவதரித்த பூமி…அயோத்தியை சுற்றி வரலாம் வாங்க!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR