முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்ற 17 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து உள்ளது.
Supreme Court agrees to hear plea by 18 AIADMK MLAs against their disqualification by Tamil Nadu Assembly Speaker on June 27. Madras High Court on June 14 passed a split verdict in the case.
— ANI (@ANI) June 25, 2018
18 அதிமுக எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தனர். பின்னர், கடந்த ஜூன் 14 ஆம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து, ஜூன் 14 ஆம் தேதி விசாரணை செய்ததில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். நிதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இவ்வழக்கை விசாரிக்கும் 3 ஆவது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் 17 பேரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து உள்ளது.