அப்பாவு டூ ஆர்என் ரவி: 50 ஆயிரம் கோடி கேட்டு வாங்கி கொடுங்களேன்..! ஆளுநர் ரியாக்ஷன்

சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவராணம் கொடுக்க பிஎம் கேர் தொகையில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேருக்கு நேராக கோரிக்கை வைத்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2024, 04:02 PM IST
  • ஆளுநர் கருத்துக்கு அப்பாவு பதில்
  • தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி வாங்கி கொடுங்கள்
  • சட்டப்பேரவையில் நேருக்கு நேர் கோரிக்கை
அப்பாவு டூ ஆர்என் ரவி: 50 ஆயிரம் கோடி கேட்டு வாங்கி கொடுங்களேன்..! ஆளுநர் ரியாக்ஷன் title=

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்தார். அரசு கொடுத்திருக்கும் உரையில் தனக்கு பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருப்பதாகவும், அதனால் அரசு கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்கவில்லை என அவர் தெரிவித்தார். ஆர்.என்.ரவிக்கு இருக்கும் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு அரசு செயல்பட முடியாது, அரசு கொடுக்கும் உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை, அதுதான் மரபு என்றாலும் ஆர்.என்.ரவி அதனை மீறிவிட்டதாக கூறி அப்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சபாநாயகர் அப்பாவு உடனடியாக ஆளுநர் உரையை வாசித்தார். 

மேலும் படிக்க | ஆளுநர் என்ட்ரி முதல் எக்ஸிட் வரை... சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - தலைவர்களின் ரியோக்சன்!

அதில், இலங்கை தமிழர் மற்றும் சிறுபான்மையினரை பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப்படாது என்பதில் தமிழ்நாடு அரசு மிக உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவச் சுற்றுலாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, சமூக நீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றை நாட்டிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் என்றும் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது. இதனை எல்லாம் வாசித்த சபாநாயகர் அப்பாவு, அரசு உரை தயாரித்த போதும், நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அளித்த போதும், தமிழ்நாடு ஆளுநர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு அவைக்கு வந்து இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல என தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “ தமிழ்நாட்டில் மக்கள் புயல், வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டபோது ஒன்றிய அரசு ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் இருக்கிறது. பிஎம் கேர் நிதி இந்திய மக்களால் கணக்கெழுத முடியாத, கணக்கு கேட்க முடியாத நிதியிலிருந்தாவது ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாயை ஐயா ஆளுநர் வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என நானும் கேட்கலாமே?” என ஆளுநர் ஆர்.என்.ரவியை நோக்கி நேருக்கு நேராக சட்டப்பேரவையிலேயே கேள்வி கேட்டார்.

மேலும், “ சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல இந்த தமிழ்நாட்டு சட்டமன்றமும், தமிழ்நாட்டு மக்களும்” என கூறினார். அவரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி இறுக்கமான முகத்துடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் என என சபாநாயகர் அப்பாவு கூறியபோதும், ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை பொருட்படுத்தாமல் வெளியே சென்றார். அதன்பிறகு, ஆளுநரின் தனிப்பட்ட கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

மேலும் படிக்க | 'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News