தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எடுக்காமல் இருந்தால் தான் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும் - சபாநாயகர் அப்பாவு பேட்டி.
Speaker Appavu: லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தனது மகனுக்கு சீட் கொடுக்காததால் சபாநாயகர் அப்பாவு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் , சபாநாயகர் அப்பாவு சாவர்க்கர், கோட்சேவை பின்பற்றுபவர் என விமர்சித்ததால் ஆளுநர் ஆர்என் ரவி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவராணம் கொடுக்க பிஎம் கேர் தொகையில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேருக்கு நேராக கோரிக்கை வைத்தார்.
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை கூட மிரட்டினார்கள் என சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு வரத் தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நாடாளுமன்ற தேர்தலில் அனுதாபத்தைதான் ஏற்படுத்தும். அமைச்சரின் கைதால் கொங்கு மண்டலமே கொதித்து போய் உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற அடையாளமும் தரப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் பேச கூடிய விஷயங்களை சட்டசபையில் பேசுகிறீர்களே வானதி சீனிவாசன். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை கேளுங்களேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
திருவிழாக் காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தஞ்சாவூர் தேர் விபத்து விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.