பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை -தமிழக அரசு உத்தரவு

TN School College Holiday: நாளை (அக்டோபர் 30) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பிற்பகல் அரைநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவு

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 29, 2024, 05:16 PM IST
  • தீபாவளிக்கு நாளை அரைநாள் விடுமுறை
  • தமிழ்நாடு அதிரடி அறிவிப்பு வெளியீடு
  • நவம்பர் 4 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை -தமிழக அரசு உத்தரவு title=

Tamilnadu School and College Holiday Announcement | தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை பிற்பகல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வெளியூரில் இருப்பவர்கள்சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாகவும், முக்கிய நகரங்களில் மாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அத்துடன் நாளை மாலை புதுத்துணி, பட்டாசு வாங்க திட்டமிட்டிருந்த குழந்தைகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 

 

அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு ஏற்கனவே சிறப்பு விடுமுறையாக நவம்பர் 1 ஆம் தேதி அறிவித்திருந்தது. அதாவது வியாழக்கிழமை தீபாவளி, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு வேலை நாளாக இருந்தது. சனி மற்றும் ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்களாக இருந்ததால், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தீபாவளிக்காக வெள்ளிக்கிழமை ஒருநாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் விருப்பத்தையும் ஏற்று வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பு ஏற்கனவே பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | தீபாவளிக்கு 4 நாள் லீவு... குஷியில் மாணவர்கள், அரசு அலுவலர்கள் - வந்தாச்சு உத்தரவு

இந்த சூழலில் தான் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக தமிழ்நாடு  அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், "அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் மட்டுமே பள்ளி கல்லூரிகள் செயல்படும். பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிடுகிறது" என தெரிவித்துள்ளது. நாளை துணி மற்றும் பட்டாசு கடைகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாகவும், இரட்டிப்பு தீபாவளி பரிசாகவும் அமைந்திருக்கிறது. நவம்பர் 4 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். 

தீபாவளிக்காக அரசு ஏற்கனவே குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து மகிழ்ச்சியை கொடுத்தது. மற்றவர்களுக்கு சிறப்பு போனஸ் தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனால் அவர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த ஆண்டு தீபாவளியைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | தீபாவளி இனிப்பு, காரம் தரமில்லையா? இப்போதே இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News