சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று தலைமைச்செயலகம் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை வரும் மார்ச் 9 ஆம் தேதி (திங்கக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெரும் எனக் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சார்பாக அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2020-20 ஆம் ஆண்டுக்காக வரவு-செலவு திட்டத்தின் மீது பிப்ரவரி 20 ஆம் தேதி வரை விவாதம் நடந்து முடிந்தது. மேலும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது அமர்வு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் அரசுத் துறைகளுக்கு வழங்குவதற்கான மானியம் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.