நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதும் இல்லை, வந்தால் அவர் மட்டுமே பேசிவிட்டு எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மன்மோகன் சிங் உள்ளிட்ட இதுவரை பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கேள்வி பதில்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், இதுவரை கேள்விகளை எதிர்கொள்ளாத ஒரே பிரதமர் என்றும் சாடிவருகின்றனர்.
மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!
இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு தெலங்கானா எம்பி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதனடிப்படையில் அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு என்று கூறியுள்ளார். அதேபோல், இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்கும்போதே தமிழக அரசு அதிக கடன் சுமையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்த நிலையில், இப்போது மாநிலத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் கடன் தொகையை பொறுத்தவரையில் முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் அவற்றின் பலன்கள் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் தெரியவரும் என்று நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இன்னும் சிலர் இதில் தமிழ்நாடு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | கமல் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பகீர் குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ