தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என ஆனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று, அதாவது, 05.11.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2022 மற்றும் 08.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க | குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 9, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 8, கொட்டாரம் (கன்னியாகுமரி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 7, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வட்ராப் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), முத்துப்பேட்டை (திருவாரூர்) தலா 6, வைப்பார் (தூத்துக்குடி), பிலவக்கல் (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), சேரன்மாதேவி (திருநெல்வேலி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம் (கோவை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), தாராபுரம் (திருப்பூர்), தென்காசி (தென்காசி), சங்கரன்கோவில் (தென்காசி), நாகப்பட்டினம், பாம்பன் (ராமநாதபுரம்) தலா 5, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), களியல் (கன்னியாகுமரி), திருக்குவளை (நாகப்பட்டினம்), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி), வேப்பூர் (கடலூர்), ராமநாதபுரம், தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), ராஜபாளையம் (தஞ்சாவூர்), ராஜபாளையம் (விருதுநகர்), தக்கலை (கன்னியாகுமரி), காட்டுமயிலூர் (கடலூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), ஆயிக்குடி (தென்காசி), செய்யார் (திருவண்ணாமலை), வேடசந்தூர் (திண்டுக்கல்), காரைக்கால், மணிமுத்தாறு ARG (திருநெல்வேலி), சூரங்குடி (தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 4, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செங்கல்பட்டு, கூடலூர் (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), வீரபாண்டி (தேனி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), கிண்ணக்கோரை (நீலகிரி), மயிலாடி (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), குந்தா பாலம் (நீலகிரி), பவானிசாகர் (ஈரோடு), பர்லியார் (நீலகிரி), சிதம்பரம் (கடலூர்), தலைஞர் (நாகப்பட்டினம்), திருமங்கலம் (மதுரை), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), கள்ளக்குறிச்சி, சூரலக்கோடு (கன்னியாகுமரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஓடன்சத்திரம் (திண்டுக்கல்), திருப்பூண்டி (மாவட்டம் நாகப்பட்டினம்), சிவகாசி (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வேடநத்தம் (தூத்துக்குடி ) தலா 3, ராதாபுரம் (திருநெல்வேலி), க.பரமத்தி (கரூர்), வீரகனூர் (சேலம்), மயிலாடுதுறை, பல்லடம் (திருப்பூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), வெள்ளக்கோவில் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), சிதம்பரம் AWS (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி), மோகனூர் (நாமக்கல்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), பெருந்துறை (ஈரோடு), விருதுநகர் (விருதுநகர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), சிறுகுடி (திருச்சி), மணப்பாறை (திருச்சி), கே.எம்.கோயில் (கடலூர்), பழனி (திண்டுக்கல்), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), டிஎஸ்எல் கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), செங்கோட்டை (தென்காசி), திருவாரூர், கிருஷ்ணராயபுரம் (கரூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பேரையூர் (மதுரை), திருப்போரூர் (செங்கல்பட்டு), நிலக்கோட்டை (திண்டுக்கல்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சங்கரிதுர்க் (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2, பெலாந்துறை (கடலூர்), தேக்கடி (தேனி), கெத்தை (நீலகிரி), லக்கூர் (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), விருதுநகர் AWS (விருதுநகர்), பாண்டவையார் தலைமை (திருவாரூர்), நத்தம் (திண்டுக்கல்), கீழச்செருவாய் (கடலூர்), மாயனூர் (கரூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), காரைக்குடி (சிவகங்கை), சோழவரம் (திருவள்ளூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), ஏற்காடு (சேலம்), மீ மாத்தூர் (கடலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கடம்பூர் (தூத்துக்குடி), (ஈரோடு), கொத்தவாச்சேரி (கடலூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), ஆர்எஸ்எல்-2-சூரப்பட்டு (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), அரவக்குறிச்சி (கரூர்), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), விமான நிலையம் மதுரை (மதுரை), Rscl-2 கேதார் (விழுப்புரம்), குளித்தலை (கரூர்), மண்டபம் (ராமநாதபுரம்), கொரட்டூர் (திருவள்ளூர்), பஞ்சப்பட்டி (கரூர்), கடலூர் (கடலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), திருப்புவனம் (சிவகங்கை), விரகனூர் தா. (மதுரை), கொப்பம்பட்டி (திருச்சி), பொள்ளாச்சி (கோவை), திருவள்ளூர் (திருவள்ளூர்), மூலனூர் (திருப்பூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), டிஎஸ்எல் ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பெரியார் (தேனி), கன்னியாகுமரி (மாவட்டம்), லால்குடி (திருச்சி), மேட்டுப்பட்டி (மதுரை), திருவாடானை (இராமநாதபுரம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கன்னிமார் (கன்னியாகுமரி), ஆனைமடுவு அணை (சேலம்), கயத்தாறு (தூத்துக்குடி), ஆத்தூர் (சேலம்), அலியார் (கோவை), உசிலம்பட்டி (மதுரை), கேசிஎஸ் மில்-2 கச்சிராயப்ப (கள்ளக்குறிச்சி), அவலாஞ்சி (நீலகிரி), கயத்தாறு (மாவட்டம்), தூத்துக்குடி), சீர்காளி (மயிலாடுதுறை), கொடைக்கானல் (திண்டுக்கல்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), சித்தம்பட்டி (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), ஆம்பூர் (திருப்பத்தூர்), எமரலாடு (நீலகிரி), புவனகிரி (கடலூர்), டிஎஸ்எல் எறையூர் (கள்ளக்குறிச்சி), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), ), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.11.2022: தென்கிழக்கு வங்கக்கடலின் வட மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.11.2022: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அத்தனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ