அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்...

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : May 6, 2019, 11:32 PM IST
அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்... title=

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தங்கரையில் 8 செ.மீ, வேலூரில் 5 செ.மீ, அரூரில் 2 செமீ மழையும் பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Trending News