எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று 47-ஆயுள் கைதிகள் விடுதலை பெறுகின்றனர். முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
அதன்படி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதற்கட்டமாக 10-ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 67 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர், கடந்த 12-ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். என்று சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார்.