சர்வர் பராமரிப்பு காரணமாக வரும் 16 மற்றும் 17-ஆம் தேதி அரசின் ஈ-சேவை மையங்கள் இயங்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது!
தமிழக அரசு தொடர்பான அனைத்து விவரங்களையும் நாம் தமிழக அரசின் ஈ-சேவை மையங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக இதில், தமிழக அரசு வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பொது அறிவிப்புகள் அனைத்தும் அரசின் ஈ-சேவை மையங்கள் மூலம் எளிதாக அறிந்த கொள்ளலாம். தமிழக அரசின் புதிய திட்டனகள் பற்றியுள் இதில் அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில், தமிழகத்தின் பொதுசுகாதாரத்துறை சார்பில் மகப்பேறு மற்றும் சிசு தொடர் கண்காணிப்பு மதிப்பீட்டுக்கான பிக்மி (Picme ) என்ற இணையதளத்தை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம், தமிழகம் முழுவதும் கருவுற்ற பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் சுகாதாரத்தை முழுமையாக கண்காணித்து, தேவையான உதவிகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை ஈ-சேவையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சர்வர் பராமரிப்பு காரணமாக வரும் 16 மற்றும் 17-ஆம் தேதி அரசின் ஈ-சேவை மையங்கள் இயங்காது என்றும் வரும் 18-ஆம் தேதி முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.