சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று பல புதிய திட்டங்களைத் துவக்கி வைத்தார்.
இன்று முதல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் திட்டம் முதல்வரால் துவக்கப்பட்டது. கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பனை வெல்லம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக்கூடியது. மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ள பனை வெல்லம் இனி ரேஷன் கடைகளின் கிடைத்தால், அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் (Ration Shops) 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ என்ற வகையில் பனை வெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளிக்கு தமிழ்த்தறி பட்டுப்புடவையையும் முதல்வர் இன்று அறிமுகப்படுத்தினார்.
ALSO READ: புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்!
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதல் முறையாக நியாய விலை கடைகளில் கற்பகம் பிராண்ட் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) துவக்கி வைத்தார்.
மேலும், காதிகிராப்ட் பொருட்களை விற்பனை செய்யும் தளமான டி.என்.காதி (tnkhadi) என்ற செயலி ஒன்றையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். சுமார் ரூ.65 லட்சம் செலவில் சாயல்குடியில் அமைக்கப்பட்டுள்ள பனை பொருள் பயிற்சி மையத்தையும் முதல்வர் இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதற்கிடையில், அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் மாதத்தில், 1 - 3 ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி அரை நியாய விலை கடைகளை திறக்க தமிழக அரசு (TN Government) உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் வசதிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: நவம்பர் 1 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR