தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று; 3591 பேர் குணம்; மரணம் - 69

தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று; 3591 பேர் குணம்;  மரணம் - 69

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2020, 06:53 PM IST
தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று; 3591 பேர் குணம்;  மரணம் - 69 title=

Coronavirus Tamil Nadu News Updates: தமிழகத்தில் இன்று மேலும் 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை  1,34,226 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, " தமிழகத்தில் இன்று புதிதாக 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 3,965 பேரில் சென்னையில் மட்டும் 1185 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 69 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. 

 

இந்தியாவின் கோவிட் -19 தொற்று 8 லட்சத்தை தாண்டி 27,114 பேருக்கு பாதிப்பு மற்றும் 519 இறப்புகள் என கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மொத்த நேர்மறை தொற்றுகளின் எண்ணிக்கை  8,20,916 ஆக உள்ளது. அதில் 2,2123 பேர் இறந்துள்ளனர். 2,83,407 பேர் செயலில் உள்ளனர். 5,15,386 குணமடைந்து வெளியேறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

டெல்லியில் கோவிட் -19 நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார். மேலும் இதேபோன்ற அணுகுமுறையை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.  நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

Trending News