ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு எப்போதும் மனதுக்கு இதமாகவும் குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவுவதால் தமிழக மட்டுமல்ல பல்வேறு அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருவதுண்டு. ஏற்காட்டில் இயற்கையான அழகை கண்டு ரசிப்பதோடு எப்போதும் மிதமான சூழ்நிலை நிலவுவதால் ஏற்காட்டின் அழகை ரசிக்க ஏராளமானோர் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஏற்காட்டில் காலை நேரத்தில் கடுமையான பணிபொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஏற்காட்டின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரையும் கடுமையான பணிப்பணிவையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேலாகியும் ஏற்காட்டில் பனிபொழிவு மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Tamil Nadu Weather Today: இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை
எதிரில் வரும் ஆட்கள் கூட தெரியாத சூழ்நிலை ஏற்காட்டில் நிலவுவதால் ஒருபுறம் ஏற்காட்டின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பணிகள் மறுபுறம் கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் பாதிப்புள்ளாகியுள்ளனர். நாளுக்கு நாள் இதுபோன்ற பணிபொழிவு அதிகரித்து வருகிறது என்றும் எப்போதும் இல்லாத அளவில் தற்போது குளிர் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை ஏற்காட்டில் பரவலாக இதே போன்ற சூழ்நிலை தான் நிலவுகிறது. மாலை 4 மணிக்கு இந்த பனிமூட்டம் ஏற்படுவதாகவும் மாலையிலிருந்து இரவு விடிய விடிய மற்றும் நண்பகல் 12 மணி வரை இது போன்ற பனிபொழிவு இருப்பதால் சுற்றுலா பயணிகளும் சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .
ஏற்காடு, தமிழக மக்களால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் ஊட்டியை விட ஏற்காடு செல்வதற்கான செலவு குறைவு. ஊட்டி தமிழகத்தின் ஒரு மூலையில் இருப்பதால் அங்கு போய்வர செலவு ஆகும். மேலும், ஊட்டியானது தமிழக, கேரள எல்லையில் இருப்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமா இருக்கும். அதனால் இயல்பாகவே, ஊட்டியில் விலைவாசி அதிகமாக இருக்கும். ஆனால், ஏற்காடு தமிழகத்தின் நடுப்பகுதியில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்கள் வருகை தான் அதிகம் இருக்கும். எனவே, சுற்றுலா செலவு குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க | தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!
மேலும் படிக்க | குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ