நீட் தேர்வுக்கான பயிற்சி இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கொளப்பலூர் மற்றும் காசிப்பாளையம் பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பான விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,
அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.