சென்னை இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி அரங்கில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைப்பு செயலாளர் மற்றும் துணை அமைப்புச் செயலாளர்கள் என அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை:
அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் ஆலோசனைக்கூட்டத்தில் பின்வருமாறு பேசினார்:
“என் பிறந்தநாள் அன்றுதான் இந்த அணிக்கும் பிறந்த நாள். தொடங்கப்பட்ட 9 மாதங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இருக்கிறார்கள் என்றால் அது உங்களுடைய துடிப்பான செயல்பாடு. இளைஞர் அணி பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நீங்கள் அனைவரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு அடுத்ததாக விளையாட்டு மேம்பாட்டு அணி நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாக பங்கேற்று இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ’அவரு ஒரு மன நோயாளி’ கொடநாடு கொலை வழக்கில் புதிய குற்றச்சாட்டு
பாஜக-வை சூசகமாக குட்டிய உதயநிதி..!
உதயநிதி ஸ்டாலினின் உரை தொடர்ச்சி…
“தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது. அதற்கு காரணம் திமுகவும் திமுகவை வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெரியார், கலைஞர், அண்ணா, பேராசிரியர் போன்ற பயிற்சியாளர்களால் நாம் வழிநடத்தப்பட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் நாம் எப்போது எப்படி செயல்பட வேண்டும் என நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.
மக்களின் கோரிக்கைகள்..
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், முன்பெல்லாம் தான் சுற்றுப்பயணம் சென்றால் மக்கள் வேலை வேண்டும் மருத்துவம் வசதி வேண்டும் கல்வி உதவி வேண்டும் என்று கூறிவந்ததாகவும் ஆனால் இப்பொழுது எல்லாம் மைதானம் வேண்டும் உடற்பயிற்சி கூடம் வேண்டும் விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றும் கூறினார். அந்த அளவிற்கு விளையாட்டு மீதான ஆர்வம் ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உதயநிதி கருத்து குறித்து மா.சுப்பிரமணியன்..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது குறித்த தனது கருத்தினை மா.சுப்பிரமணியன் இன்றைய கூட்டத்தில் தெரிவித்தார். “உதயநிதி புதிய கருத்தை ஒன்றும் கூறவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என அனைவரும் கூறிய கருத்தைதான் உதயநிதி ஸ்டாலினும் கூறி உள்ளார். பிறப்பால் யாரும் தாழ்ந்தவர் அல்ல, உயர்ந்தவர் அல்ல. அப்படி பிரித்தால் நாங்கள் எதிர்ப்போம் என்பதைதான் தெரிவித்தார். அவ்வாறு பிரித்தால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம்” என்றார்.
மேலும் “உதயநிதி ஸ்டாலின் கூறியதை இந்துக்களுக்கு எதிரான கருத்து என திரிக்கின்றனர். இந்துக்களுக்கு எதிரான கருத்தை உதயநிதி கூறவில்லை. எத்தனை வழக்கு போட்டாலும் தான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சமத்துவம் வரும் வரை போராட்டம் தொடரும்” என்று கூறினார்.
மேலும் படிக்க | FICCI FLO நிறுவன விழாவில் ராம்ப் வாக் நடை போட்ட மாற்றுத்திறனாளி பெண்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ